பனீர் தோசை ரொம்ப பிடிக்குமா ? இப்படி செய்து பாருங்கள்!

பனீர் தோசை ரொம்ப பிடிக்குமா ? இப்படி செய்து பாருங்கள்!

தோசையில் பனீர் தோசை, ரவா தோசை, அவல் தோசை என 30 க்கும் மேற்பட்ட தோசை வகைகள் உள்ளன். இன்று பனீர் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்,

புழுங்கலரிசி – ஒரு கப்,

துருவிய பனீர் – ஒரு கப்,

பச்சை மிளகாய் – 2,

உப்பு – தேவைக்கேற்ப,

பொடியாக அரிந்த கொத்துமல்லி – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பனீரை துருவி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் கொத்துமல்லியையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.

ஊறிய அரிசியை உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர் அதனுடன் துருவிய பனீர், பச்சைமிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, சிறிது கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

சோயாபனீர் சேர்த்தும் செய்யலாம். உடம்புக்கு மிகவும் நல்லது. புளிப்பு வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்கவைத்து, பிறகு பனீர் சேர்த்துச் செய்யலாம். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்