ஆம்,
நகத்தின் அழகே ஒருவரது உண்மையான அழகை சொல்லிவிடும். நக அழகை எப்படி பாதுகாப்பது என்பதைப்
பார்க்கலாம்.
நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமலும், கோணலாக வளைந்து வளராமல், நேராக வளரவும் கால்ஷியம் சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை சாற்றுடன் வெந்நீரைக் கலந்து கைகளை சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இப்படிச் செய்வது விரல்களுக்கும், நகங்களுக்கும் மிகவும் நல்லது.
பொதுவாக விரல் நகங்களை ஓவல் வடிவத்தில் வெட்டி விடுவதே நல்லது. ஆனால் எல்லோருக் கும் இது பொருந்தாது. எனவே அவரவர் விரல்களுக்குப் பொருந்துகிற படி சதுரமாகவோ, வட்ட மாகவோ வெட்டிக் கொள்ள லாம்.
நகங்களுக்கு தினமும் நெயில் பாலிஷ போடுவதைத் தவிர்ப்பது நல்லது. விழா நேரங்களில் மட்டும் போட்டு, அதனை உடனே நெயில்
பாலீஷ் ரிமூவர் மூலம் அகற்றுவதே சிறாப்பு. தொடர்ந்து நக பாலிஷ் பயன்படுத்தினால் நகங்களின் இயல்பான நிறம் மறைந்து விடும்.