முகம் மட்டும் அழகா இருந்தா போதுமா… கையைக் கொஞ்சம் கவனியுங்க

முகம் மட்டும் அழகா இருந்தா போதுமா… கையைக் கொஞ்சம் கவனியுங்க

கைகளைப் பராமரிப்பதில் நம்மில் எத்தனை பேர் அக்கறை காட்டுகிறோம்? சுருக்கங்களுடனும், கோடுகளுடனும் காணப்படும் கைகள் உங்கள் ஒட்டுமொத்த அழகையே கெடுத்து விடும். கைகள் பரா மரிப்பிற்கு சில ஆலோசனைகள்….

கைகள் வழவழப்பாக

சில பெண்களுக்கு உள்ளங்கைகள் எப்போ துமே சொர சொரப்பாக இருக்கும். இவர்கள் தங்கள் கைகளை அதிக நேரம் டிடெர்ஜென்ட், சோப், பாத்திரம் துலக்கும் பவுடர் போன்ற வற்றில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். கைகளுக்கான பிரத்யேக சிகிச்சையான மெனிக்யூர் வாரம் ஒரு முறையாவது செய்யப் பட வேண்டும். இதன் மூலம் கைகள் வழவழப்பாக, பளபளப்பாக இருப்பதுடன், சுருக்கங்கள் நீங்கி கைகளில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

விரல்கள் அழகாக

சிலருக்கு விரல்கள் குட்டையாக இருக்கும். இவர்கள் விரல்களை நீளமாகக் காட்ட, நகங் களை நீளமாக வளர்த்துக் கொள்ளலாம். அதே போல் நீளமான விரல்களை உடையவர்கள் நகங்களைக் குட்டையாக வளர்த்துக் கொள்ளலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்