மாணவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவது எப்படி?

மாணவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவது எப்படி?

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காலை உணவு சாப்பிடும்போது முதலில் இரண்டு வாழைப்பழம், பச்சை வெண்டைக்காய், கைப்பிடி கொத்தமல்லி இலை முதலியவற்றை மெதுவாக மென்று சாப்பிட்டுவிட்டு பிறகு சமைத்த உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கலாம்.  மதிய உணவு சாப்பிடும்பொழுது முதலில் ஒரு காரட், ஒரு கொய்யாப்பழம்,
ஒரு வெள்ளரிப்பிஞ்சு முதலியவற்றை
மெதுவாக மென்று சாப்பிடபிறகு சமைத்த உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். மாலை 4 மணிக்கு இரண்டு வெற்றிலையை வாங்கி தண்ணீரில் கழுவி விட்டு அதன் நடுவில் ஒரு கடலைமிட்டாய் வைத்து சாப்பிடவும்.  எண்ணெயில் பொரித்த மாலை நேரச் சிற்றுண்டிகளை நிறுத்தி விடவும்.  இரவு 7 மணிக்கு இரவு 7 மணிக்கு இரண்டு பழங்கள் சாப்பிட்ட பிறகு கொத்தமல்லி அல்லது புதினா சட்னி, காய்கறி சட்னி, பழ சட்னி முதலியவற்றுடன் சுக்கா சப்பாத்தி சாப்பிடவும். காலை, மதியம், இரவு மூன்று நேரமும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.  காலை, மாலை 2 நேரங்களிலும் இயற்கை காபி அல்லது இயற்கை டீ சாப்பிடலாம். இரவு கண்விழித்து பள்ளி படிக்கும் பொழுது இடையில் ஒரு தடவை கண்களை நன்றாக கழுவ வேண்டும்.

மதிய உணவில் அவல், வெல்லம், தேங்காய் கலவையை சேர்த்துக் கொள்ளலாம். அவல் பாதி, தேங்காய்த் துருவல் பாதி என்ற
முறையில் மாற்றினால் இரண்டு மூன்று மாதங்களுக்குள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்தலாம்;
அறிவு வளரும்.  வாரத்தில்
ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்து பழகிக் கொள்ள வேண்டும்.  குறைவாக சாப்பிடும் மாணவர்கள் பொதுவாக நன்றாக படித்து முதல் மார்க்குகளைப் பெறுவார்கள். எனவே உங்கள் குழந்தைகள் அதிகமாக சாப்பிடவில்லை என்று கவலைப்படாதீர்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்