காதலியுடன் காதலன் எப்படி கைகுலுக்க வேண்டும் தெரியுமா?

காதலியுடன் காதலன் எப்படி கைகுலுக்க வேண்டும் தெரியுமா?

பொதுவாக நண்பர்களை உறவினர்களை, நேர்முகம் செல்லும் பொழுது மேல் அதிகாரிகளைச்
சந்தித்கும் போது வாழ்த்துக் கூறி கை குலுக்குகிறோம். 
உறுதியான கை குலுக்கல்கள் ஆண், பெண் இருபாலாரிடமுமே அடுத்தவரை பற்றிய முதல்
அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது என்பதை புத்தகங்கள் மூலம் அறிந்துள்ளோம். இந்தக் கருத்தையே
சில உளவியல் ஆராய்ச்சிகளும் உறுதி செய்துள்ளன.

அலபாமா பல்கலைக்கழகம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் கைகுலுக்கல் பற்றிய ஆராய்ச்சியை
நடத்தியது. இந்த ஆய்வின் படி ஒருவருடைய கை குலுக்கும் முறை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும்
ஒரே மாதிரிதான் இருக்கிறது. அந்த குலுக்கலுக்கும் குலுக்குபவரின் குணாதிசயத்திற்கும்
நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

உறுதியாக அதாவது பலமாக, உற்சாகமாக நீண்ட நேரம் கண் பார்வை
முழுமையாக நேராகச் சந்திக்க கை குலுக்குபவர்கள், பிறரிடம் சகஜமாக பழகுபவர்களாகவும்,
பரந்தநோக்கு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுடன் பழகும்போது கூச்சப்படுவதோ,
பயத்தை காண்பிப்பதோ இல்லை.

ஆனால் கைகளை லேசாகப் பிடித்து மென்மையாகக் குலுக்குபவர்கள்
பெரும்பாலும் இதற்கு எதிர்மறையான குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கூச்ச சுபாவமும்,
ஒருவகை அச்சமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி ஒருவருடைய குணாதிசயங்களை
கைகுலுக்கல்கள் மூலம் அறிவதற்கு உதவியாக இருக்கிறது.

கை குலுக்கும் விதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆண்கள்
பெண்களைவிட கைகளை உறுதியாக பிடித்துக் குலுக்குகிறார்கள். பெண்களின் கை குலுக்கல்கள்
சாதாரணமாக லேசானதாகவே இருக்கும். சுதந்திரமான மற்றும் படித்த பெண்கள், புது முயற்சிகளை
எடுப்பதில் துணிவான பெண்களின் கை குலுக்கல்கள் உறுதியாக இருக்கிறது.

ஆனால் ஆண்களிலோ
திறந்த மனது உடையவர்களின் கைகுலுக்கல்கள் லேசாகவே இருக்கிறது. இந்த ஆராய்ச்சி தொழில்
சார்ந்த உறவுகள் மற்றும் வேலைக்கு தேர்ந்தெடுப்பது போன்ற நேரங்களில் பெரிதும் பயனளிக்கிறது.

கைகுலுக்கல் சம்பந்தமாக
இன்னொரு ஆராய்ச்சியும் இருக்கிறது. பொதுவாக பெண்கள் கரங்களை உறுதியாகப் பிடித்துக்
கை குலுக்குபவர்களையே பெரிதும் விரும்புகிறார்களாம். உங்கள் காதலை ஒரு பெண் ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்றால் அவரது கரங்களை உறுதியாகப் பிடித்துக் குலுக்குங்கள்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்