ஒரு பெண் கர்ப்பமாக எத்தனை முறை உடல் உறவு கொள்ள வேண்டும் தெரியுமா?

ஒரு பெண் கர்ப்பமாக எத்தனை முறை உடல் உறவு கொள்ள வேண்டும் தெரியுமா?

பெரும்பாலான புதுமண தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு சீக்கிரமே கருத்தரித்துவிடுவார்கள். தற்போது சில தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்து கருத்தரிப்பதை தள்ளிப்போட்டு வருகின்றனர். மேலும் சில தம்பதியினர் கருத்தரிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சமிபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் எத்தனை முறை உறவுக் கொண்டால் கருத்தரிக்க முடியும் என்று ஆய்வு செய்யப்பட்டது.

சராசரியாக புதுமண தம்பதியினர் கருத்தரிக்க முடிவு செய்த நேரத்திலிருந்து 78 முறை உடலுறவு கொள்கிறார்கள். இந்த 78 முறையானது சுமார் ஆறுமாத கால நேர அளவை குறிக்கிறது. இதுபற்றி சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் ஆய்வு செய்த போது பெரும்பாலான தம்பதியினர் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஒரு மாதத்திற்கு 13 முறை உடலுறவு கொள்வது தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆய்வில் கருத்தரிக்க முயற்சிக்கும் போது பலரும் உறவு கொள்வதை ஒரு வேலையாகவே உணர்வதை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். 43 சதவீதம் மக்கள் கட்டாயம் கருத்தரிக்க வேண்டும் என்ற மன அழுத்தத்தோடு உடலுறவில் ஈடுபடுகின்றனர். 

புதுமண தம்பதியினர் ஒரு நாளுக்கு பல முறையில் உறவில் ஈடுபடுவதால் எளிதாக கருத்தரிக்க முடியும் என நம்புகிறார்கள். ஆனால் அடிக்கடி உறவு கொண்டால் ஆண் களின் விந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். ஆகையால் இரண்டு நாளுக்கு ஒருமுறை உறவு கொண்டால் விந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனவும் வல்லுனர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து நாட்களுமே பெண்கள் கருத்தரிப்பதற்கு சரியான நாட்களாக இருப்பதில்லை. சில நாட்கள் பெண்கள் எளிதாக கருத்தரிக்கும் நாட்களாக உள்ளன. அதன்படி மாதவிடாய் சுழற்சி ஆரம்பிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பும் , அண்ட விடுப்பு நாளும் ஆகும். அண்டவிடுப்பின் இரண்டு நாட்களில் உடலுறவு மேற் கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகின்றது.

அண்டவிடுப்பின் போது கருப்பை ஒரு முதிர்ந்த கருமுட்டை வெளியிடுகிறது. இந்த கரு முட்டை கருப்பைக்கு செல்லும் வழியில் ஃபாலோபியன் குழாய் வரை செல்கிறது. இந்த நிலையில் விந்தனுக்கள் கருமுட்டையை நேராக சந்திக்கின்றன. பொதுவாக விந்தணுக்கள் ஒரு பெண்ணின் உடலில் ஐந்து நாட்கள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. ஆகவே கருத்தரிக்க முயற்சி செய்யும் போது விந்தனுக்கள் அண்டவிடுப்பின் போது ஃபாலோபியன் குழாயில் இருக்க வேண்டும். ஆகவே அண்டவிடுப்பு இரண்டு மூன்று நாட்கள் முன்பிருந்தே உடலுறவில் ஈடுபடலாம் எனவும் கூறப்படுகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்