• குழந்தையின் சிறுநீரகம், கண்கள், இதயம், நுரையீரல், நரம்புமண்டலம் போன்றவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் ஏ ஆகும்.
• திசுக்குறைபாடுகளை சரி செய்வதற்கும், உடலின் உட்புற உறுப்புகளின் வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ இன்றியமையாத ஒன்றாக செயலாற்றுகிறது.
• உடலில் ஏற்படும் பல்வேறு கிருமித்தொற்றுகளுக்கு எதிராக வைட்டமின் ஏ போராடும் தன்மை வாய்ந்தது.
• குழந்தைக்கு நல்ல கண் பார்வை கிடைப்பதற்கு வைட்டமின் ஏ இன்றியமையாத ஊட்டச்சத்தாக விளங்குகிறது.
வைட்டமின் ஏ போதிய அளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்த முறையில் உதவிபுரிகிறது. அதுவே அதிகம் எடுத்துக்கொண்டால் ஆபத்தாகவும் மாற வாய்ப்பு உண்டு.எப்படி ஆபத்தாக மாறலாம் என்பதை அடுத்த செய்தியில் பார்க்கலாம்.