ஃபோலிக் மாத்திரை சாப்பிடுவதால் கர்ப்பிணிக்கு இத்தனை நன்மைகளா?

ஃபோலிக் மாத்திரை சாப்பிடுவதால் கர்ப்பிணிக்கு இத்தனை நன்மைகளா?

• ஒரு குழந்தையின் எதிர்காலம் என்பதே அதன் மூளை வளர்ச்சியில்தான் இருக்கிறது. சிசுவின் மூளை வளர்ச்சிக்கும், மண்டையோட்டு வளர்ச்சிக்கும் உதவி செய்வது ஃபோலிக் அமில மாத்திரைகள்தான்.
• குழந்தைக்கு முதுகெழும்பு, முதுகுத்தண்டுவட பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் ஃபோலிக் அமிலம் அவசியமாகிறது.
• குழந்தையின் முக்கிய உடல் உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாதங்களில் ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்வதால் பிறவிக்குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
• எலும்பு மஜ்ஜையில் சிவப்பணுக்கள் உற்பத்தியாவது குறைந்து ரத்தசோகை ஏற்படுவதை தடுக்கும் தன்மையும் ஃபோலிக் அமிலத்தில் உண்டு.
பசலைக்கீரை, அவரைக்காய், தக்காளி, வாழைப்பழம், புரோக்கோலி, பீட்ரூட், காலிஃப்ளவர், ஆட்டிரைச்சி, முட்டை, மீன் போன்றவற்றில் ஃபோலிக் வைட்டமின் அதிகமாக இருந்தாலும், சிறுநீரில் கரைந்து வெளியேறக்கூடிய தன்மை உள்ளது. அதனால் கர்ப்பிணிகளுக்கு ஃபோலிக் மாத்திரைகளே அதிக அளவில் பயன் தரக்கூடியதாக உள்ளது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?