தவிர்க்க வேண்டியவை:
சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.
சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மது அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மிக எளிமையான மருந்துதான்,ஆனால் வீரியம் அதிகம்.நாட்டுமருந்து கடைகளில், ஓமத்தைலம் அல்லது கற்பூரவல்லித்தைலம் என்று சிறிய பாட்டிலில் கிடைக்கும் . அதனை வாங்கிக் கொள்ளுங்கள்.
பச்சைக் கற்பூரம்
அந்த தைலத்துடன், சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து,சிறிதளவு விரலில் எடுத்து, குறட்டை விடும் நபரின் மூக்கில் அல்லது வாயின் வழியே செல்லும் சுவாசத்தில் வைக்க, அந்தத்தைலம் சுவாசத்தின் வழியே உள்ளே செல்லும், செல்லும்போதே ஆக்சிஜன் பற்றாக்குறையால் தடைபட்ட சுவாசத்தை அதிவிரைவில் சரிசெய்யும்,. இதுபோல சில முறை செய்துவர, நிமிடத்தில் குறட்டை நீங்கும்.
குறட்டை விடுபவரும் சிரமமின்றி மூச்சு விட்டு சுவாசிப்பது,அவரின் அமைதியான முகத்தின் வழியே அறியலாம். மேலும், இந்தத் தைலத்துடன் சிறிது மின்ட் ஆயிலும் சேர்த்து உபயோகிக்கலாம், மருந்தின் காரத்தன்மையை குறைந்து, குளுமையுடன் செயலாற்ற வைக்கும்.
சில தினங்களில், குறட்டை விடுபவரின் சுவாசம் சீராகி,அமைதியாக உறங்குவார், அவர் மட்டுமா, அவரின் குடும்பத்தாரும்தான். அவரின் உடலில் படாமல் சிறிதளவு இந்தத்தைலத்தை சுவாசத்தில் வைத்து, அவர் குறட்டையிலிருந்து குணமடையச் செய்யுங்கள். நீங்களும் நன்கு உறங்கி நலம் பெறலாம்