எளிமையான உணவுகள் மூலம் வயிற்றில் சேரும் அதிகப்படியான வாய்வை எப்படி சரி செய்யலாம்?

எளிமையான உணவுகள் மூலம் வயிற்றில் சேரும் அதிகப்படியான வாய்வை எப்படி சரி செய்யலாம்?

தண்ணீரை சுடவைத்து அதனுடன் சிறிது பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். அதனுடன் புதினா இலையை சேர்த்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம். கேஸ் பிரச்னைகளுக்கு பூண்டு மிகச்சிறந்த தீர்வு. பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிடலாம். அல்லது பூண்டு, மிளகு, சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

கேஸ்ட்ரிக் பிரச்னைகளுக்கு கடுகு மிகவும் சிறந்தது. அதனால் கடுகு சூப் வைத்து குடிக்கலாம். அதே போல் சூடான பானங்களை அருந்துங்கள். டீ, காபி, கிரீன் டீ, இஞ்சி டீ குடிக்கலாம். திட உணவு வகைகளை குறைத்துக்கொண்டு அதிகமாக நீராகாரம் எடுத்துக்கொள்ளுங்கள். சூப், கஞ்சி, ஃபிரெஷ் ஜூஸ் ஆகியவற்றை பருகுங்கள்.

இலவங்கப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். அல்லது இலவங்கப்பட்டையை வறுத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து குடித்தாலும் நல்ல பலன் தரும். நீரில் பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். அதிகமாக குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கலாம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?