வெந்நீரில் இஞ்சி துருவலை போட்டு ஆவி பிடிப்பதும் நல்ல தீர்வாகும். இஞ்சியின் காரம் மூக்கின் வழியாக சென்று அடைப்பை நீக்கும். யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு ஆவி பிடித்திட மூக்கடைப்பு நீங்கும். 3-4 சொட்டு விட்டாலே போதுமானது. கைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும்.
சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். மிளகு கஷாயம், இஞ்சி, சுக்கு கஷாயம் ஆகியவையும் நல்லது. 10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம்.
மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்யும். கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றும். தலைக்குளியல்தான் நல்லது. தோள்ப்பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே உருவாக்கி கொண்டது. குளியல் என்றால் தலை முழுகுதல் என்றே பெயர். இதுவே ஆரோக்கியமான குளியல். உடல் சூட்டை குறைக்கும்.