ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களில் மட்டும் 3 நாட்கள் ஏற்றம் கண்டும், 2 வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது. ஒரு புறம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இதன் எதிரொலியோ இங்கு இந்திய சந்தையிலும், ஆபரண தங்கத்தின் விலையும் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்திய கமாடிட்டி சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இறக்கம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று மாதமாக வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா – சீனா இடையே நடைபெற்று வரும் பொருளாதார வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகமாகி விட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் மீதான விலை ஏற்றத்திற்கு காரணம்.
இந்தியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் அதிபர்கள் நிலம் வாங்குவதற்குப் பதிலாக தங்க நகைகள் அதிக அளவில் வாங்குவது. இந்தக் காரணங்களால்தான் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,757 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,056 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,600 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 28,800 ஆகவும் இருந்தது.
ஆனால் இன்று சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,579 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,632 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,736 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 29,888 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு: 19.9.2019 – 1 grm – Rs. 3736/-, 8 grm – 29,888/- ( 24 கேரட்) 19.9.2019 – 1 grm – Rs. 3579/-, 8 grm – 28,632/- (22 கேரட்) வெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.70 ஆகவும் கிலோ ரூ.49,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.. இந்திய சந்தைகளை பொறுத்த வரை நிலவி வரும் பொருளாதார மந்தம், அதிக வட்டி விகிதம் இவற்றால் தங்கம் இறக்குமதியானது தொடர்ந்து குறைந்து வருகிறது.
எனினும் இந்தியாவில் வரவிருக்கு பண்டிகை காலங்களில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆக உலக அலவில் நிலவி வரும் விலை தங்கத்தின் விலை இங்கு சற்று எதிரொலித்தாலும், அதிகப்படியான வரி மற்றும் இறக்குமதி வரி, மற்றும் அதிக்கப்படியான தேவை உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகம் குறையாவிட்டாலும், சற்று குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.