பெண் குழந்தைகள் வளரும் பருவம் முதலே பிளாஸ்டிக் பொருள்களில் உணவு கொடுப்பதை தடை செய்யுங்கள். இதிலிருக்கும் பிஸ்பீனால் ஏ , தாலேட்ஸ் போன்ற வேதிபொருள்கள் ஹார்மோனில் மாற்றத்தை உண்டாக்கும். இனிப்பு, கொழுப்பு,அதிக எண்ணெய் நிறைந்ந்த உணவுவகைகளை இயன்றவரை தவிர்த்துவிடுங்கள்.
குழந்தைகளை ஓரிடத்தில் உட்காரவிடாமல் சிறுவயது முதல் உடல் பயிற்சி, யோகா போன்ற வற்றை பழக்குங்கள். இது உடல் பருமனை உண்டாக்காது. மரபு ரீதியாக பெண் குழந்தைகள் விரை வில் பூப்படைவதை தள்ளி போட முடியாது. ஆனால் உணவு பழக்கங்களால் அதிவிரைவில் பூப்படை தலை உணவு பழக்கத்தாலேயே வென்றுவிடலாம்.
அதனால் தான் குழந்தைகள் வளரும் போதே உட லின் ஹார்மோன் வளர்ச்சியில் மாற்றம் உண்டாக்காத ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இவை பெண் குழந்தைகள் இயற்கையாக உரிய வயதில் பூப்படைதலை உண்டாக்கவும் வாய்ப்புண்டு.
மேலும் பெண் குழந்தைகளுடன் அம்மாக்கள் கண்டிப்பாக நேரம் ஒதுக்குங்கள். அவர்களை மன அழுத்தம் சேராமல் அரவணையுங்கள்.