இருமல் சளி தொல்லைகளுக்கு இதோ பண்டை காலத்து இயற்கையான முறையில் சிரப்!

இருமல் சளி தொல்லைகளுக்கு இதோ பண்டை காலத்து இயற்கையான முறையில் சிரப்!

மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள் ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள். தேனோடு இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

இந்த சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது. இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும்.

இருமல் தொல்லை சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளுக்கு 3 – 4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும். இதில் இருக்கும் ஆண்டி-கொலஸ்ட்ரால், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவும்.

இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க பயனளிக்கும்.
செரிமானத்தை ஊக்கவிக்கும் தன்மை கொண்டது இந்த சிரப்.
நீரிழிவுக்கு சிறந்த மருந்து இது. இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உடல் நலத்திற்கு உதவும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்