சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் சீத்தாப்பழ மர இலைகள்! எப்படி?

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் சீத்தாப்பழ மர இலைகள்! எப்படி?

பழத்தின் சதைப்பகுதியை எடுத்து சாப்பிட்டு வர ரத்த விருத்தி ஏற்படும். சோகை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
சீதாப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், அதிகமாக இருப்பதால், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியவர்கள் எலும்புகள் வலுப்படவும் உதவுகிறது.
ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்த சுத்தி ஏற்பட்டு ரத்த நாளங்களிலுள்ள கொழுப்பு பொருட்களை அடைத்துக் கொள்ளுவதைத் தடுக்கும். மாரடைப்பு வராது பாதுகாக்கும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாபழ இலைகளுக்கு உள்ளது. சீத்தாப்பழ இலைகள் உடலில் உள்ள சர்க்கரையை கரைத்து சீரான அளவில் வைக்க உதவுகிறது. இந்த இலைகளை 5 எடுத்து 1 டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு அதன் பிறகு வடிகட்டி தினமும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்கும்.
 

சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் இரண்டு சீதாப்பழம் தின்றால் மலச்சிக்கல் நீங்கும்.
 

 நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் டைப் -2 டயாப்டீஸ் நோய் உள்ளவர்கள் குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்து உள்ளதால் இது மூச்சு குழாய்களில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்