பிரசவம் முடிந்ததும் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க வேண்டுமா?

பிரசவம் முடிந்ததும் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க வேண்டுமா?

சுகப்பிரசவம் அடைந்த பெண்கள் அன்றைய தினமே குழந்தையை நெஞ்சோடு அணைத்து ஆசை தீர தாய்மையை அனுபவிக்க முடியும்தாயின் உடல் சூடும், நெருக்கமும் இந்த நேரத்தில் குழந்தைக்கு அதிகம் தேவைப்படும். அதனால் குழந்தையுடன் நெருக்கம் பாராட்டுவது மிகவும் அவசியம்.

குழந்தைக்கு தாயின் குரலும், தாயின் வாசனையும், தாயின் உடல் சூடும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்பதால் எப்போதும் உடனிருக்க வேண்டும். தாயின் தொடுதலுக்கும் அரவணப்பிற்கும் ஆரம்பத்தில் குழந்தை வித்தியாசம் காட்டுவதில்லை என்றாலும், சில மணி நேரங்களில் தாயுடன் குழந்தை முழுமையாக ஒட்டிக்கொள்ளும்..

அதனால் புதிதாக குழந்தையை வேறு எவரிடமும் கொடுத்துவிடாமல் தாயே முழுமையாக அன்பும் கவனிப்பும் செலுத்தவேண்டும்.  தாயின் தொடுதலும், பார்வையும் குரலும் குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!