இதனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதளவில் பெரிதும் பாதிப்பு அடைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குழந்தைகளின் மனதில் வன்முறை தூண்டப்படுவதாக ஆய்வில் வெளிவந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் குஜராத் அரசு இந்த விளையாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டுக்கு பலரும் தடைவிதிக்கக்கோரி கூறப்பட்ட நிலையில் தற்போது குஜராத்தில் தடை விதித்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சூரத் மாவட்ட நிர்வாகம் ‘பப்ஜி விளையாட்டு மார்ச் ௯ முதல் தடை செய்யப்படவுள்ளது. பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கான சுற்றறிக்கை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பப்ஜி விளையாட்டை தடை விதிப்பதில் குஜராத் மாநிலம் முதன்மையாக விளங்குகிறது