12 மாவட்டங்களில் வெப்ப அனல் காற்று வீசும்! வானிலை மையம் எச்சரிக்கை!

12 மாவட்டங்களில் வெப்ப அனல் காற்று வீசும்! வானிலை மையம் எச்சரிக்கை!

காஞ்சிபுரம், திருவள்ளுவர்,தர்மபுரி, மதுரை,சேலம்,திருச்சி, வேலூர்,கரூர்,நாமக்கல், திண்டுக்கல்,ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அனல் காற்றுக்கான எச்சரிக்கை மூன்றாவது நாளாக இன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும்,தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது,இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் 

காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

நேற்று உள் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் அநேக இடங்களில் அனல் காற்று வீசியது,இன்றும் உள் தமிழக மாவட்டத்தில் இயல்பில் இருந்து 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்,நாளை முதல் இந்த நிலை குறையும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தலவல்.. 

கடந்த 24 மணி நேரத்தில் மழை குறிப்பிட கூடிய அளவில் பதிவாகவில்லை.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்  அதிகபட்ச வெப்பநிலை 35டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27டிகிரி செல்சியஸ் பதிவாகும்..

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்