உடல் செல்களை புதுப்பிக்கும் ஆண்டாக்ஸிடென்ட் கொய்யாவில்தான் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இதனை ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்கிறார்கள்.
· நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட கொய்யாவில், வைட்டமின் பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் நிரம்பியுள்ளது.
· கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதைவிட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.
* தோலை பளபளப்பாக்கவும் முதுமை தோற்றத்தைப் போக்கி இளமைத் தோற்றம் தரவும் உதவுகிறது கொய்யா.
* இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். ரத்த சோகை நோயில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. அதேபோன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்