நேற்று தடாலடியாக இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்தது!

நேற்று தடாலடியாக இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்தது!

நவம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் கடைசி ஒரு வாரமாகத் தங்கம் விலை குறைக்கப்பட்டது. நவம்பர் மாதம் 20 ஆம் தேதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.30,600 ஆக இருந்தது. அதனையடுத்து ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து கொண்டே வந்தது.

நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் மீண்டும் ஏறிய தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 232 குறைந்து நேற்று டிசம்பர் 2ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 30224/- க்கு விற்பனை செய்யப்பட்டது. 

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,778 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,224 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,617 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 28,936 ஆகவும் இருந்தது.

ஆனால் இன்று சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,623 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,984 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,784 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,272 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

3.12.2019 – 1 grm – Rs. 3784/-, 8 grm – 30,272/- ( 24 கேரட்)

3.12.2019 – 1 grm – Rs. 3623/-, 8 grm – 28,984/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 47.70 ஆகவும் கிலோ ரூ.47,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்