மூன்று நாட்களுக்கு மட்டும் காலை மாலை இருவேளைகள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நறுக்கிய தேங்காய்ச்சில் + கால் ஸ்பூன் கசகசா இரண்டையும் சேர்த்து சிறிது சிறிதாக ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடித்து ஒரு டம்ளர் வடிகட்டாத தேங்காய்ப் பாலை எடுக்கவும். பின்னர் தேங்காய்ப் பாலுடன் நுணுக்கி வைத்துள்ள பனங்கருப்பட்டித் தூளைச் சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும்.
குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
வயிற்றில் கோளாறை உண்டுபண்ணும் உணவு எனத் தெரிந்தால் அவற்றை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டும். இவ்வுணவானது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமானதாக இருக்கும். ஆகவே அவரவர் அனுபவத்தால் தீமை செய்பவை எவை எனத் தெரிந்து ஒதுக்கிவிட வேண்டும்.
சாப்பிடும் உணவின் சூடு கூட முக்கியமானதாகும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன மிகவும் நன்மை பயக்கும்.
பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன. ஆகவே அதிக அளவில் இவைகளைச் சாப்பிடலாம்.
பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது. பால் சாப்பிடுவதை யாரும் சிபாரிசு செய்வதில்லை.