சர்க்கரை அளவை குறைக்க தினமும் இதை உண்ணுங்கள்! மாத்திரை மட்டும் போதாது!

சர்க்கரை அளவை குறைக்க தினமும் இதை உண்ணுங்கள்! மாத்திரை மட்டும் போதாது!

முள்ளங்கியில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மேலும் இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் நீரிழிவு நோயாளி என்றால் முள்ளங்கி கொண்டு சாலட், பரோட்டா , சாம்பார் போன்றவற்றை உட்கொள்ளலாம். முள்ளங்கியில் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு மற்றும் சில காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து சாலட் போல் உண்பதால் அதன் நன்மைகள் உங்களுக்கு அப்படியே கிடைக்கின்றன.

கோதுமையில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது . அதனால் நீரிழிவு நோயாளிகள் அதன் அளவைக் குறைப்பது நல்லது. கோதுமைக்கு மாற்றாக நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகைப் பயன்படுத்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ராகி என்று அறியப்படும் கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால் இதன் ஊட்டச்சத்து மிக அதிகம். நீரிழிவு நோயாளிகள் ராகி தோசை அல்லது ராகி பரோட்டா செய்து சாப்பிடலாம்.

பாகற்காய் கசப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. கசப்பாக இருக்கும் மருந்து விரைவில் உடலை குணப்படுத்துவது போல் பாகற்காயும் உடலுக்கு நன்மை அளிக்கிறது. பலருக்கும் அதன் கசப்பு தன்மை காரணமாக பாகற்காயை பிடிக்காமல் இருந்தாலும், எடை இழப்பில் சிறந்த முறையில் உதவும் பாகற்காய், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பாலிபெப்டைடு – பி அல்லது பி-இன்சுலின் என்னும் கூறு பாகற்காயில் உள்ளது. இதனால் நீரிழிவு கட்டுப்படுகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்