+2 தேர்வில் தோல்வியா? கவலையே படாதீங்க! நீங்கதான் நாளைய வெற்றியாளர்கள்!!

+2 தேர்வில் தோல்வியா? கவலையே படாதீங்க! நீங்கதான் நாளைய வெற்றியாளர்கள்!!

அதனால் தோல்வி ஏற்பட்டால் பரவாயில்லை, அடுத்த முறை நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று நம்பிக்கையை மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கொடுக்க வேண்டும். அந்த தேறுதல் நிச்சயம் மாணவன் மனதில் மாற்றத்தை உருவாக்கும்.ராபர்ட் புரூஸ் 17 முறை தோல்வி அடைந்தான் என்பதால் தோல்வியைக் கண்டு அஞ்சக்கூடாது என்று ஊக்கம் தர வேண்டும்.தோல்வியின் போது ஆறுதலாக தோள் தரும் பெற்றோர் அமைந்துவிட்டால், நாட்டில் மாணவர்கள் தற்கொலை இல்லாமல் போய்விடும்.

இந்த லட்சியத்தை அடைய பள்ளிகளும் தோல்விகளைத் தாங்கும் மனநிலைக்கு வரவேண்டும்.ஏனென்றால் இன்று நூறு சதவிகிதம் வெற்றியைக் காட்டவேண்டும் என்பதற்காக மாணவர்களை கொடுமைப்படுத்தும் நிலை நிறைய பள்ளிகளில் நீடிக்கிறது.இப்படிப்பட்ட பள்ளிகள் முதலில் திருந்த வேண்டும்.குறைந்த சதவிகிதம் வெற்றிபெற்றால் மோசமான பள்ளி என்று பெயர் பெற்றுவிடும் என்று நிர்வாகிகள் சிந்திப்பதே குற்றம்.இந்த சிந்தனைதான் மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாகிறது என்ற குற்றவுணர்ச்சி வர வேண்டும்.வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பதை பள்ளிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆக, மாணவர் தற்கொலையில் முதலில் திருந்த வேண்டியது பள்ளிகள். அடுத்தபடியாக பெற்றோர். இந்த இருவரும் திருந்திவிட்டால் மாணவர்கள் எளிதில் நல்ல வழிக்கு வந்துவிடுவார்கள். மாணவர் தற்கொலை என்பது இல்லாமலே போய்விடும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்