பரீட்சை என்பது மாணவ பருவத்தில் மிகவும் முக்கியமான ஓர் அம்சம்தான். அதற்காக ஒரு பரீட்சையால் வாழ்க்கையே மாறிவிடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. அதனால் தேர்வை நம்பிக்கையுடனும் சந்தோஷமாகவும் எதிர்கொள்ள கற்றுத்தர வேண்டியதுதான் முக்கியம்.
தேர்வு என்பது மாணவருக்கு மட்டும்தான். அதனால் பெற்றோர் அதிகம் மெனக்கெடுவது நல்லதில்லை. மாணவனுக்கு அது கூடுதல் பிரஷரைத்தான் உருவாக்கும். மாணவரே பரீட்சையை டீல் செய்துகொள்ளும் வகையில் பெற்றோர் செயல் இருக்க வேண்டும்.
மதிப்பெண் என்பது அவசியம்தான், ஆனால் மதிப்பெண் குறைந்தால் அச்சமோ, வருத்தமோ பட வேண்டாம், அடுத்த பரீட்சையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், தவறான முடிவுகள் எடுக்க மாட்டார்கள்.