புளித்த தயிரை கீழே கொட்டாதீர்கள்... சுவையான ரெசிபி ரெடி

புளித்த தயிரை கீழே கொட்டாதீர்கள்… சுவையான ரெசிபி ரெடி

தேவையான பொருட்கள் – புளித்த தயிர் – ஒன்னேகால் கப், அவல் – ஒரு கப், ரடை – அரை கப், வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று, பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், குடைமிளகாய், வெங்காயம் – மூன்றும் சேர்த்து ஒரு கப், கேரட் துருவல் – அரை கப், பச்சை மிளகாய் – ஒன்று, காரப்பொடி – அரை டீஸ்பூன், கடுகு – தாளிக்க, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு எண்ணெய் – தேவைக்கேற்ப.

அவலை களைந்து வடிகட்டி ஒரு கப் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். ரவையுடன் கால் கப் தயிர் சேர்த்து இரண்டையும் 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பின்னர் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து லேசாக வதக்கி இறக்கி ஊறவைத்த ரவை, அவலுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் உப்பு, மல்லித்தழை கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும். அகலமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கலவையைக் வட்டமாக தட்டி எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். சுவையான தஹி – போஹா கட்லெட் ரெடி.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்