ஊறுகாய் சாப்பிடுவது யாருக்கு நல்லது தெரியுமா?

ஊறுகாய் சாப்பிடுவது யாருக்கு நல்லது தெரியுமா?

எலுமிச்சை, மாங்காய், இஞ்சி போன்ற காய்களில் இருந்து ஊறுகாய் தயாரிப்பதால் உடலுக்கு நல்லது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. இது உண்மையா என்பதை தெரிந்துகொள்வோம்.

• ஊறுகாயை அதிகம் எடுத்துக்கொண்டால், அடிவயிற்றில் வலி, பிடிப்பு, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

• ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு.

• ஊறுகாயில் எண்ணெய் அதிகம் இருப்பதால், ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கலாம். 

• தினமும் ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

தினமும் ஊறுகாய் சாப்பிடுவதை பழக்கமாக வைத்திராமல், ஏதேனும் ஒரு நேரம் அதுவும் அளவோடு சாப்பிட்டால் மட்டுமே, ஊறுகாய் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.  உடல் நலன் மீது அக்கறை இல்லாதவர்கள் மட்டுமே ஊறுகாய் சாப்பிடலாம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!