பட்டு போன்ற முகஅழகோடு நீங்களும் அழகியாக வலம் வர ஆசையா?

பட்டு போன்ற முகஅழகோடு நீங்களும் அழகியாக வலம் வர ஆசையா?

முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலைப் பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.

உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பாலை  காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு அரை மணி நேரம் கழித்து முகம்  கழுவினால் முகம் பளபளப்பாகும். 

தக்காளிச் சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சைசாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!