• பிரசவம் முடிந்த நாளில் இருந்தே எடை குறைய தொடங்குகிறது என்றாலும் பொதுவாக ஆறு மாதங்கள் வரை எடை குறைவு நீடிக்கலாம்.
• பிரசவத்திற்கு பிறகு எடை குறைவது அல்லது எடை அதிகரிப்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் பல்வேறு தனித்தனி காரணங்களால் நிகழ்கிறது.
• வயது, பரம்பரைத்தன்மை, உடற்பயிற்சி, உணவு, கர்ப்பத்தடைக்கு பயன்படுத்தும் சாதனம், குடும்ப சூழல் போன்றவை எடை விஷயத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
• குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது உடல் எடையை குறைக்கிறது என்றாலும் தாய்ப்பால் ஊட்டும் அனைத்து பெண்களுக்கும் எடை குறைவதில்லை.
இவைதவிர, கர்ப்பத்திற்கு முன்பே உடல் பருமன், உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் போன்றவை உடல் குறைப்பதில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. கர்ப்பிணியின் உடல் எடை குறித்து மேலும் சில விவரங்களை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.