உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. கசப்பு சுவை அதிகமானால் உடலில் நீர் குறைந்து தோல், எலும்புகளில் பாதிப்பு உண்டாகும்.
அடிக்கடி மயக்கம் ஏற்படவும் வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் கசப்பு சுவை மிகுதியாய் உள்ளது.
கசப்பு சுவை உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, குடலில் புழு, பூச்சி போன்ற உயிரினங்கள் தங்கமுடியாது. அதனால் உடலில் சத்து பிடித்து பளபளப்பாக சருமம் மின்னும்.
எவ்வளவு வேண்டுமானாலும் கசப்பு எடுத்துக்கொள்ளலாம், பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.