குண்டு உடல் உள்ளவர்களுக்கு கர்ப்பத்தில் என்ன சிக்கல் வரும் தெரியுமா?

குண்டு உடல் உள்ளவர்களுக்கு கர்ப்பத்தில் என்ன சிக்கல் வரும் தெரியுமா?

            • கர்ப்பத்திற்கு முன்னரே உடல் பருமனாக இருக்கும் பெண்கள், கர்ப்ப காலத்தில் இன்னும் கூடுதலாக எடை அதிகரிக்கிறார்கள். ஆனால்         பிரசவத்திற்கு பிறகு, கர்ப்பகாலத்தில் அதிகரித்த எடை முழுமையாக குறைவதில்லை.

            • வயிற்றுக்குள் குழந்தையை சுமக்கும்போதும், பிரசவத்தின் போதும் மற்றவர்களைவிட இவர்களுக்கு கூடுதல் சிக்கல்         உருவாகிறது.                                

            • இவை தவிர கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னை, ரத்த உறைவு, வெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு முடிச்சு       போன்றவையும் இவர்களுக்கு உருவாகும் வாய்ப்பு அதிகம்.

            • கர்ப்பம் சுமக்கும் தாய்க்கு மட்டுமின்றி கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கும் உடல் பருமன் காரணமாக பல்வேறு சிக்கல்கள் தோன்றுகின்றன.

            அதனால் குழந்தைக்குத் தாயாக நினைக்கும் குண்டு பெண்கள், கர்ப்பம் தரிக்கும் முன்னரே மருத்துவரை சந்தித்து ஆலோசனை                                       செய்யவேண்டும். கர்ப்பம் தரிக்கும் முன்பு உடல் எடையை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது பிரசவ காலத்தில் மிகுந்த                பயனளிக்கும். கர்ப்பகால உடல் பருமன் குறித்து நாளை பார்க்கலாம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?