·
கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை தோன்றிவிடுகிறது என்பதுதான் உண்மை.
·
குறிப்பாக கர்ப்பம் உறுதியான ஆறு வாரங்களிலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்படுகிறது.
·
இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணமாக இருப்பது ஹார்மோன் சுரப்பாகும். மாறுபட்ட ஹார்மோன் சுரப்பு காரணமாகவே ரத்தவோட்டம் அதிகரிக்கிறது.
·
ரத்தவோட்டம் கிட்னி வழியே அதிகமாக பாயும்போது, சிறுநீர் பை சிக்கிரமாக நிரம்பிவிடும். அதனால் அடிக்கடி பாத்ரூம் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி கர்ப்பப்பை சிறுநீர்ப்பையை அழுத்துவதன் காரணமாகவும் உடனடியாக சிறுநீர் கழிக்கவேண்டிய அவஸ்தை கர்ப்பிணிக்கு ஏற்படுகிறது. இதனை கர்ப்பத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதுதான் நல்லது.