பெண்களுக்கு கறு கறுவென அழகான அடர்த்தியான முடி இருப்பதற்கு முக்கிய காரணம் தேங்காய் எண்ணை. தலையில் தேய்ப்பது மட்டுமின்றி உணவிலும் தேங்காய் எண்ணை பயன்படுத்தியே சமைக்கலாம். தேங்காய் எண்ணையில், லாரிக் ஆசிட் அதிகமாக உள்ளது. இதனை தலையில் தேய்ப்பது மட்டுமின்றி உணவில் சேர்த்து சாப்பிட்டால் கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது. இந்த லாரிக் ஆசிட், தலை முடியில் இருக்கும் புரோட்டீன்களை இறுக்கமாக்கும். இதனால் முடி உடையாது, கனமாக அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.
வெந்தயம் எல்லா வீடுகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசியத் தேவை. தலைமுடிக்கு ஆகச் சிறந்த மருந்து. இதில் அதிகமான புரோட்டீன் மற்றும் நிசோடினிக் ஆஇச்ட் இருப்பதாக் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். மேலும், தலை முடியை கனமாக வளர்ச் செய்யும், இதனால் பாதியிலேயே முடி உடைவது தடுக்கலாம்.
பெரிய நெல்லியில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளது. இது தலையில் ஏற்படும் அரிப்புகளை கட்டுப்படுத்தி, வளர்ச்சியை அதிகரிக்கும். பாலக் கீரையில், வைட்டமின் பி, சி, இ மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. மேலும், இரும்புச்சத்து இந்த கீரையில் அதிகமாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து உடலில் ஓடும் இரத்தத்தின் மூலம் ஆக்சிஜன் சப்ளை தலை வரை சென்று சேர்க்கும். இதனால் முடி வேகமாக வளரும்.