தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது தொடர்ந்து சாப்பிட்டால் உங்கள் காதலிக்கு பிடித்தது போன்ற ஸ்மார்ட்டான தாடி கிடைத்து விடும்.
தாடி முடியை சிறப்பாக வளர வைக்க முட்டை சிறந்த உணவாக இருக்கும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரோனின் அளவு சீராக இருந்தாலே தாடி அழகாக வளரும். முட்டை சாப்பிட்டு வருவதால் இவை டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்து தாடி முடியை கிடக்கிடவென வளர செய்து விடும்.
வைட்டமின் சி இயற்கையிலே இந்த பழத்தில் அதிக அளவில் இருப்பதால் தாடியின் முடி வளர்ச்சி அதிகரிக்கும். தாடி வளராமல் அவதிப்படுவோருக்கு இந்த ஆரஞ்சு பழம் சிறந்த முறையில் உதவும். தினமும் ஆரஞ்சை சாப்பிட்டு வந்தாலே ஆண்கள் செழிப்பான தாடியுடன் காட்சி தருவீர்கள்.
சாப்பிட கூடிய உணவில் உருளைக்கிழங்கை சேர்த்து கொண்டால் அவை டெஸ்டோஸ்டெரோனின் உற்பத்தியை அதிகரித்து விடும். காரணம் இதிலுள்ள கார்ப்ஸ் தான். தினமும் கொஞ்சம் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாடியின் முடி சீக்கிரமாக வளரும்.
இதுவரை பலரும் கேள்விப்படாத ஒன்றுதான் இது. கம்பில் உள்ள க்ளுட்டன் என்கிற மூல பொருள் கூட தாடியின் வளர்ச்சி உதவுமாம். ஆதலால், அவ்வப்போது கம்பங்கூழ் போன்ற கம்பினால் செய்த உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். இது தடியின் வளர்ச்சிக்கு உதவும்.
போரான் என்கிற முக்கிய மூல பொருள் உலர் திராட்சையில் அதிக அளவில் உள்ளது. இது தாடியின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால், இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலர் திராட்சை சாப்பிட்டு வரவதால் டெஸ்டோஸ்டெரோன் அளவு உயர்ந்து, தாடி நன்றாக வளரும்.