எந்த பழத்தையும் சாப்பிட கூடாதா ? சர்க்கரை நோயாளிகளின் பெரும் கவலை!

எந்த பழத்தையும் சாப்பிட கூடாதா ? சர்க்கரை நோயாளிகளின் பெரும் கவலை!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைத்து வகை பழங்களையும் சாப்பிடலாம்! பழங்களில் இனிப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை சர்க்கரை என்று எண்ணி பயப்படுகிறார்கள். உண்மையில் பழங்களில் உள்ள இனிப்பு நார்சத்துடன் கூடிய நீரில் கரையாத இனிப்பு, அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றாது.

நாம் சாப்பிடும் பீர்க்கங்காய், புடலை, பூசணி, சுரைக்காய் போன்றவை “லோகிளை சீமிக்” உணவுகள். இவற்றை அதிகமாக உண்ணலாம். அதே போல கொய்யா, சப்போட்டா, பப்பாளி, தர்பூசணி, கிர்னி, நாவல்பழம், பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற அனைத்து வகை பழங்களும் 50 (அ) 60 கிராம் வரை ஒரு நாளில் ஒரு வேளை உண்ணலாம். காலை 11 மணி (அ) மாலை 4-5 மணியளவில் பழங்களை சாப்பிடுவது சிறந்தது.

ஏனென்றால் இந்த உணவு இடைவெளியின் பொழுது, உடலுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது, அதேநேரத் தில் சர்க்கரை அதிக மாகவும் கூடாது. பழங்களில் உள்ள நார்சத்துடன் கூடிய சர்க்கரை இந்த வேலையை கச்சிதமாக செய்கிறது. ஆனால் மா, பலா, வாழை இந்த லிஸ்டில் இடம் பெறவில்லையே என்று நினைக்க வேண்டாம். இம்முக்கனிகளும் கூட கட்டாயம் சாப்பிடலாம். ஆனால் அளவு என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும். சில சமயங்களில் பழ சாலட்டாகக் கூட 50 கிராம் அளவு சாப்பிடலாம். 50 கிராம் என்றால் எவ்வளவு என்ற சந்தேகம் உள்ளவர்கள் ஒரு சிறிய (அ) மீடியம் சைஸ் பழத்தை தேர்ந்தெடுத்து முழுசாக சாப்பிடலாம். பெரிய சைஸ் என்றால் பாதி சாப்பிட்டு பாதியை யாருடனாவது ஷேர் செய்து விடலாம்.

பூமிக்கடியில் வெங்காயம், முள்ளங்கி, நூக்கல், கேரட், பீட்ரூட், உருளை போன்றவை விளைகிறது. வெங்காயம், முள்ளங்கி தவிர மற்றவைகளில் மாவுச்சத்து கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் அது நல்ல நார்சத்து மற்றும் பல மினரல், வைட்டமின் நிறைந்ததாகவும் இருக்கும். இவற்றை சாப்பிடுவதால் சுகர் ஏறாது. 

பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் போன்ற கொட்டை வகைகள் ஒரு கைப்பிடியளவு ஸ்னாக்ஸாக சாப்பிடலாம். இதில் நல்ல வகை கொழுப்புதான் உளளது. பயப்படத் தேவையில்லை.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்