வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டிருப்பீங்க, வாழைக்காய் வடை சாப்பிட்டிருங்கீங்களா!!!

வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டிருப்பீங்க, வாழைக்காய் வடை சாப்பிட்டிருங்கீங்களா!!!

தேவையானவை

வாழைக்காய் – 2

கடலை மாவு – 200 கிராம்

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – ஒரு துண்டு

பெரிய வெங்காயம் – 1

கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

வாழைக்காய்களை வேக வைத்து, மேல் தோலை மட்டும் உரித்து அகற்றி விட வேண்டும். பிறகு வாழைக்காயை துறுவி வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லிக்கீரை ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

வெந்து துறுவிய வாழைக்காயுடன் துண்டு செய்த பொருட்களையும், கடலை மாவையும் சேர்த்து போதுமான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்து எடுக்கவும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!