இன்று மாலை சிற்றுண்டிக்கு இதை செய்து பாருங்கள்!!!

இன்று மாலை சிற்றுண்டிக்கு இதை செய்து பாருங்கள்!!!

தேவையானவை:

பச்சரிசி – அரை கப்,

புழுங்கலரிசி – அரை கப்,

துவரம்பருப்பு – அரை கப்,

கடலைப்பருப்பு – அரை கப்,

காய்ந்த மிளகாய் – 10,

பெருங்காயம் – 1 டீஸ்பூன்,

தேங்காய் துருவல் – அரை கப்,

சீரகம் – அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிது,

உப்பு – ருசிக்கேற்ப,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!