* தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது. இது நஞ்சு முறிவாகவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் கசகசா, தேன் கலந்து கொடுத்தால் வயிற்றுப் பிரச்னைகள் தீரும்.
* தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்தாகவும் தலைமுடி வளர்ச்சிக்கு அற்புத டானிக்காகவும் பயன்படுகிறது. சோரியாசிஸ் போன்ற நாள்பட்ட நோய்களையும் தீர்க்கிறது.
* தேங்காய் எண்ணெய் கொண்டு சமையல் செய்தால், அது சீக்கிரம் ஜீரணமாகும்.
அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய் பால் சிறந்த முறையில் பலன் அளிக்கிறது. தொடர்ந்து உணவில் தேங்காய் சேர்த்து வந்தால் மேனி அழகும் மிளிரும். கேரளப் பெண்கள் உணவில் அதிகம் தேங்காய் சேர்த்துக்கொள்வதால்தான், திடமான அழகும் கவர்ச்சியும் இருக்கிறது. அதனால் தேங்காயை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.