மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

மூங்கில் மரத்தின் விதைகள்தான் மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளானதும் பூத்து, காயாகி, பின்னர் அது விதைகளாக மாறுகிறது. இதனை பறித்து, காய வைத்து, சுத்தப்படுத்தினால், கடுகைவிட சற்று பெரிதான தானியம் கிடைக்கும். இதுதான் மூங்கில் அரிசி எனப்படுகிறது.

·        
மூங்கிலரிசி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் பருவகால நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.

·        
உடலில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைபாட்டை நீக்கும் தன்மை மூங்கில் அரிசியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

·        
எலும்பை உறுதியாக்கும் தன்மையும் நரம்புத் தளர்ச்சியை சீர்செய்யும் குணமும் மூங்கில் அரிசிக்கு உண்டு.

·        
மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது என்பதால் ஜீரண சக்திக்கு நல்லது.

·        
மூங்கில் அரிசி சாபிடும் மலைக்கிராம மக்களுக்கு புற்று நோய் வந்ததே இல்லை, என்பதில் இருந்தே அதன் நோய் எதிர்ப்புத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

மூங்கில் அரிசி கிடைப்பது அரிது என்பதால், உண்மையான மூங்கில் அரிசிதானா என்று உறுதி செய்தபிறகே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்