கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் குழந்தைக்குப் பாதிப்பா?

கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் குழந்தைக்குப் பாதிப்பா?

·        
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீர் சுரப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

·        
அதனால் வழக்கத்துக்கு மாறாக ஊறுகாய், மாங்காய், நெல்லிக்காய் போன்ற புளிப்பு சுவை பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு கூடுதல் சுவையாகத் தெரியும்.

·        
இரும்புச்சத்து குறைவாக இருக்கும் கர்ப்பிணிகளுக்கு, சாம்பல் சாப்பிடவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருப்பதும் இயல்பு.

·        
வாய்க்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சமாக புளிப்பு எடுத்துக்கொள்வது தவறு இல்லை. புளிப்போடு தயிர் அல்லது மோர் சாப்பிடுவது நல்லது.

அதிக புளிப்புத் தன்மையுள்ள பொருட்களை சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி நெஞ்செரிச்சல், அல்சர் உண்டாகலாம். உப்பு, காரம், புளிப்பு அதிகம் சாப்பிட்டால் உயர் ரத்தஅழுத்தம் உண்டாகவும் வாய்ப்பு உண்டு. அதனால் முடிந்தவரை அதிக புளிப்பு, அதிக உப்பு போன்றவற்றை தவிர்க்கவே முயற்சிக்க வேண்டும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்