இதன் துவர்ப்பு சர்க்கரையை கட்டுப்படுத்தும். மாதத்தில் இரண்டு நாட்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள வேதிப்பொருள் நீரிழிவு நோயாளிக்கு நன்மை தரும்
சரியான வகையில் சமைத்துச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் வரும் பலவித நோய்கள், சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும். கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிக்கும். கெட்டித் தயிருடன் வாழைப்பூ ஜூஸ் சேர்த்து சாப்பிட்டால் மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி குணமாகும்.
அச்சமயத்தில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கையும் வாழைப்பூ கட்டுப்படுத்தும்.
வாழைப்பூ வயிற்றுப் புண்ணை குணமாகும் ஒரு அரிய மருந்து. வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு ஏற்றது. வாழைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்