இனிப்பு சுவை மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடியாக சட்டென உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரக்கூடியது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. அதனால்தான் குழந்தைகள் இனிப்பு சுவையை அதிகம் விரும்புகிறார்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப இனிப்பு சுவை சில நோய்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீரிழிவு நோய்க்கு இனிப்பும் ஒரு காரணமாகும்.
இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் பருமன் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். பழங்கள், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் இனிப்புச் சுவை அதிகம் அடங்கியுள்ளது. அதனால் இந்த உணவுகளை தினமும் ஒரு நேரம் மட்டுமே எடுத்துக்கொள்வது போதுமானது.