கழட்டி விட்ட காதலி! பேனர் வைத்து காதலன் கொண்டாடிய ருசிகரம்!

கழட்டி விட்ட காதலி! பேனர் வைத்து காதலன் கொண்டாடிய ருசிகரம்!

காதலிப்பவர்களுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும். காதலியால் ஏற்படும் தொல்லைகளும், அதில் இருந்து தப்பிக்க முடியாமல் தத்தளிப்பவர்களும் அதிகம். எவ்வளவு முயற்சித்தும், காதலை  காப்பாற்றி, காதலிக்காக உயிரை கொடுக்க முயற்சிப்பவர்கள் ஏராளம்.

அப்படி இருந்தும், சில நேரங்களில், எதிர்பாராவிதமாக, காதல் கைகூடாமல் அவர்கள் பிரிய நேரிடலாம். அந்த பிரேக் அப் சம்பவம் நடக்க எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக, காதலி செய்யும் தவறுகள் கூட பிரேக் அப்பை ஏற்படுத்திவிடலாம். இந்த வேதனையை தாங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால், இங்கு ஒரு நபர் வித்தியாசமாக, பிரேக்அப்பை கொண்டாடி, பேனர் வைத்து, சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த நபர், தனது காதலியை திட்டியும், அவருக்கு சில மெசேஜ் சொல்வது போலவும் விளம்பர பாணியிலான பேனர்களை வடிவமைத்து, ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளார். 

இதில், தனது காதலியுடன் சண்டையிடும் வீடியோ காட்சிகளையும் அவர் சேர்த்துள்ளார். இந்த பேனர்களும், வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!