உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அமேசான்
நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ். இவர் அமெரிக்காவில் ஈடுபடாத தொழிலே இல்லை என்று
கூறலாம். வாஷிங்டன் போஸ்ட் என்கிற பெயரில் அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாள்
நிறுவனத்தை பெசோஸ் நடத்தி வருகிறார். மேலும் விண்வெளிக்கு ஆட்களை அழைத்துச்
செல்லும் சுற்றுலா திட்டத்திற்கான நிறுவனத்திற்கும் பெசோஸ் உரிமையாளராக உள்ளார்.
அதுமட்டும் இல்லாமல்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களிலும் பெசோஸ் ஒருவர். இவருக்கு அமெரிக்காவில்
மட்டும் 40 லட்சம் ஏக்கர் அளவிலான நிலங்கள் மற்றும் கட்டிங்கள் உள்ளன. இதன் மூலம்
அமெரிக்காவில் அதிக நிலம் வைத்திருக்கும் தொழில் அதிபர் என்கிற பெருமையும்
பெசோஸ்க்கு உண்டு. ஒட்டு மொத்தமாக சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்துகளுக்கு பெசோஸ் உரிமையாளர் என்று சொல்லப்படுகிறது.
இவர் கடந்த 1993ம் ஆண்டு
மெக்கன்சி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் பெசோஸ் – மெக்கன்சி தம்பதியினருக்கு
நான்கு குழந்தைகள் உண்டு. இந்த நிலையில் பெசோஸ்க்கு மெக்கன்சியுடனான இல்லற
வாழ்க்கை போர் அடித்துள்ளது. காரணம் என்ன என்றால் பெசோஸ் தனது நண்பரின் மனைவியான
சான்சஸ் என்பவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். சான்சஸ் பெசோசின் நண்பரான பேட்ரிக்
வொயிட் செல்லின் மனைவி ஆவார்.
நண்பரின் மனைவியாக
இருந்தாலும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதால் சான்சஸ்க்கு நான் உன்னை விரும்புகிறேன்,
உன்னை கட்டி அணைக்க ஆசைப்படுகிறேன், உன் உதடுகளில் முத்தமிட துடிக்கிறேன் என்கிற
ரீதியில் பெசோஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். உலகின் பெரும் பணக்காரரான பெசோஸ்
அனுப்பிய மெசேஜால் ஈர்க்கப்பட்ட சான்சஸ் உடனடியாக அவரது காதலுக்கு ஓ.கே
சொல்லிவிட்டார். சான்சசுக்கு தற்போது 49 வயதாகிறது.
விரைவில் சான்சசை திருமணம்
செய்து கொள் ளபெசோஸ் முடிவு செய்துள்ளார். இதனால் அவர் தனது மனைவி மெக்கன்சியை விவாகரத்து செய்யப்போகிறார். அமெரிக்க
சட்டப்படி விவாகரத்தின் போது கணவர் தனக்கு உள்ள சொத்தின் பாதியை தனது மனைவிக்கு
கொடுக்க வேண்டும். அதன் படி தற்போது 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்து
வைத்துள்ள பெசோஸ் அதில்சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை
மெக்கன்சிக்கு கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் நண்பரின்
மனைவியுடனான கள்ளக்காதலுக்கு விலையாக பெசோஸ் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாயை தனது
மனைவிக்கு தாரை வார்க்கிறார். மேலும் இந்த டீலிங் முடியும் போது உலகின் மிகப்பெரிய
பணக்கார பெண்மணியாக மெக்கன்சி இருப்பார். ஒரே ஒரு விவாகரத்தின் மூலம் மெக்கன்சி
உலகின் மிகப்பெரிய பணக்காரப்பெண்மணி ஆகப்போகிறார்.