உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
உள் தமிழகத்தில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதே போல் கடலோர மாவட்டத்தில் இன்று இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
மேலும் வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் சேலம்,கோவை ஈரோடு,திருப்பூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி திண்டுக்கல்,நாமக்கல், கரூர்,வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்.
கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட கூடிய அளவில் மழை பதிவாகவில்லை. சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.