நகத்தின் நிறம் மாறுகிறதா..? என்ன நோய் என்று அறிந்துகொள்ளுங்கள்.

நகத்தின் நிறம் மாறுகிறதா..? என்ன நோய் என்று அறிந்துகொள்ளுங்கள்.

அத்தகைய நகங்களை வர்ணம் பூசி அழகு பார்ப்பதே தற்போது பேஷன். அதிலும் ஒரு சிலர் இரு கைகளிலும் வேறு வேறு வர்ணம் பூசுவதே வேடிக்கையாக உள்ளது. கைவிரல்களுக்கு வர்ணம் பூசி அழகு பார்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட அதன் ஆரோக்கியத்தைப் பாதுக்காப்பது முக்கியமானது.

ஒருவரின் நகங்களே அவர்களின் ஆரோக்கியத்தின் கண்ணாடி போன்றது. அதாவது ஒருவரின் உடலில் ஏதேனும் குறைபாடோ நோயோ இருந்தால், அது வெளிப்படுவதற்கு முன்பே நம் நகங்களில் சில மாற்றங்களை அல்லது அறிகுறிகளை காட்டும் என தோல் நோய் வல்லுநனர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக நம் நகங்களின் வளர்ச்சிக்கோ, அழகுக்கோ, ஆரோக்கியத்திற்கோ, விட்டமின் பி ஊட்டச்சத்து முக்கியப்பங்கு வகிக்கின்றது. அதனால் திடீரென்று நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க தவறக்கூடாது.

· நகங்கள் பழுப்பாக இருந்தால் அனீமியா மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக அர்த்தம்.

· நகங்கள் முழுதும் வெள்ளையாகவும், நகநுனியில் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருந்தால், ஹெபாடைடிஸ், மஞ்சள்காமாலை போன்ற நோய்க்கான அறிகுறியாக கருதலாம்.

· நகங்கள் லேசான நீல நிறத்தில் இருந்தால், நம் உடலுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றும், நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

· நகங்கள், வறண்டு, அடிக்கடி நுனியில் உடைந்து (CRACK) கொண்டே இருந்தால் தைராய்டு நோய்க்கான அறிகுறி என்கின்றனர்.

· நகத்தில் அடர்த்தியான கோடு போன்று இருந்தால், மெலனோமா உள்ளதாக அர்த்தம். இதனை உடனடியாக கவனிக்க வேண்டும்.

· எச்.ஐ.வி பாதித்த நபருக்கு இரண்டே நாளில் நகங்கள் நீல நிறத்தில் மாறிவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

· கை மற்றும் கால் நகங்களில் ஏற்படும் வெள்ளை நிற கோடு, எந்தவித விளைவும் ஏற்படுத்துவதில்லை.

சரியான சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளும் போது நகங்களும் நல்ல முறையில் இருக்கும். விட்டமின் பி மற்றும் சிங்க் (ZINC) சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளும் போது, நகங்கள் உடையாமல் வலிமையாக எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

விரல் நகங்களை சுத்தமாகவும், வறண்டுவிடாமலும், பாதுகாக்க வேண்டும், கடிக்கக் கூடாது. மாய்ஸ்ட்சரைசர் பயன்படுத்தலாம். மாதம் ஒரு முறை மெனிக்குர், பெடிக்குர், செய்து நகங்களை பராமரிக்கலாம்.

 -ராமலெட்சுமி

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்