மாத்திரை அட்டைகளில் இருக்கும் சிவப்புக் கோடு..! எதற்கு தெரியுமா?

மாத்திரை அட்டைகளில் இருக்கும் சிவப்புக் கோடு..! எதற்கு தெரியுமா?

சின்ன சின்ன உடல் நலக்குறைவு வரும்போது மருத்துவமனை சென்று ஏன் செலவிடவேண்டும் என்று யோசிப்பவர்கள் அருகில் இருக்கும் மருந்துக் கடைக்கு சென்று மருந்தாளுநர் படிப்பை மட்டுமே படித்த அவரிடம், மருத்துவரிடம் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி, மாத்திரை வாங்கி வந்து உட்கொள்வர். அந்த வலி நிவாரணி மாத்திரைகள் அன்று சரியானது போல் தோன்றும்.

மறுநாள் அதே பிரச்சனை, அதே மருந்துக்கடை, அதே மருந்து என மருத்துவரிடம் சென்றால் என்ன செலவு ஆகி இருக்குமோ அதே செலவை மருந்துக்கடையை நம்பி செலவு செய்வர். பின்னர் குணம் ஆகாமல் கடைசியாக மருத்துவமனைக்கு சென்று மறுபடியும் செலவு செய்வர். 

பெரும்பாலும் மாத்திரை வாங்கும் வாடிக்கையாளர்களர் அதில் காலாவதியாகும் தேதி மட்டுமே பார்ப்பர். சிலர் அதுகூட பார்க்கத் தெரியாது. மாத்திரை வாங்கிய அடுத்த நொடியே வாயில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி முழுங்கிவிடுவார்கள்.

நீங்கள் வாங்கும் மாத்திரை அட்டைகளில் சிவப்பு நிறத்தில் ஒரு கோடு இருக்கும். இதை யாருமே கவனித்து இருக்க மாட்டீர்கள். இந்த மாத்திரையை மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் சாப்பிட கூடாது என்பதே அர்த்தமாகும். எனவே சிவப்பு கோடு போட்டிருக்கும் மாத்திரைகளை மருந்து சீட்டு இல்லாமல், மருத்துவரின் அறிவுரை இல்லாமல் வாங்கி போட்டுக்கொள்வது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் சிவப்பு கோடிட்ட மருந்துகளை உரிய மருந்து சீட்டை காட்டினால் மட்டுமே விற்க வேண்டும் என மருந்தகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்