முளைக்கீரையில் பச்சை நல்லதா சிவப்பு நல்லதா… எதில் அதிக பலன்கள்?

முளைக்கீரையில் பச்சை நல்லதா சிவப்பு நல்லதா… எதில் அதிக பலன்கள்?

முளைக்கீரை பரவலாக எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும் முளைக்கீரை இரண்டுமே ஒரே மாதிரியான சத்துக்கள் கொண்டவை.

• வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிரம்பியிருப்பதால் நோஞ்சான் உடலை புஷ்டியாக்கும் தன்மை கொண்டது.

• எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது, பசியைத் தூண்டக்கூடியது என்பதால் கர்ப்பிணிகளுக்கும் முதியவர்களுக்கும் ஏற்றது.

• உடல் சூட்டை தணித்து குளிர வைப்பதுடன், நரம்புக்கு சுறுசுறுப்பு கொடுக்கிறது. ரத்தக்கொதிப்பு, பித்த எரிச்சலைக் குறைக்கிறது முளைக்கீரை.

• வைட்டமின் சி நிரம்பியிருப்பதால் சளி, இருமல், தொண்டைக்கட்டு போன்ற பிரச்னைகளுக்கு ஏற்றது.

தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவில் முளைக்கீரை கலந்து கொடுத்துவந்தால், மூளை சுறுசுறுப்படையும், பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!