உடலுறவுக்குப் பின் முதலில் கட்டாயம் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

உடலுறவுக்குப் பின் முதலில் கட்டாயம் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

அனைத்து மதங்களும் சுத்தத்தை அறிவுறுத்துகின்றன. இந்து புராணங்களின் படி ஒருவர் அதிகாலை, மதியம், சூரியன் மறைந்த பிறகு என 3 முறை குளிக்க வேண்டும். குளிப்பது ஆன்மீகரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் நன்மைகளை வழங்கக்கூடியது. 

வெளியில் சென்று வந்த பிறகோ அல்லது சாப்பிடுவதற்கு முன்னரோ கை மற்றும் கால்களை கழுவ வேண்டும் என்று கூறப்பட்டுகிறது. தினமும் குளிப்பது உடல் மற்றும் மனஆரோக்கியத்தை அதிகரித்து நோய்களை தடுக்கும். பல பாவங்களும், நோய்களும் குளியல் மூலம் சரிசெய்யப்படலாம். 

இறுதிச்சடங்குக்கு சென்று வந்த பிறகு வீட்டிற்க்குள் நுழையும் முன் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். ஒருவர் இறந்த பிறகு அவரின் உடல் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடும் தன்மையை இழக்கிறது, இதனால் அது சிதைந்து பரவத் தொடங்கும். பிணத்தை எரிக்கும் போது இறந்தவர்களின் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் காற்றில் பரவ தொடங்கும். அதனால்தான் இறுதி சடங்கிற்கு சென்று வந்த பிறகு யாரையும் தொடுவதற்கு முன் குளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். 

சாணக்கியரின் கூற்றுப்படி தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தகுதி அற்றவர்கள் ஆகிறார்கள். அவர்கள் உடலுறவிற்கு பின் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் குளித்து விட்டே தொடங்க வேண்டும். மேலும் உடலுறவின் வேர்வையால் கிருமித் தாக்குதல் ஏற்படும் என்பதால் குளிக்காமல் வெளியே செல்வது நோய் வாய்ப்புகளை அதிகரிக்கும். 

ஆரோக்கியமான ஒளிரும் சருமத்திற்கு வாரத்திற்கு ஒரு முறையாவது முழு உடலுக்கும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சருமத்தில் நச்சுக்களை வெளியேற்றும்  வகையில் எண்ணெய் சருமத் துளைகளை திறந்து வைக்கும். எனவே உடலில் இருக்கும் மற்ற சத்துக்களும் விரைவில் வெளியேறாமல் இருக்க உடனடியாக குளிக்க வேண்டியது அவசியம்

முடி வெட்டிய பிறகும் உடனடியாக குளிப்பது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் உடலில் ஓட்டும் முடிகள் பாக்டீரியாக்களுக்கு உணவாக மாறிவிடும். 

சாஸ்திரங்களில் பல வகை ஸ்நானங்கள் உள்ளன

அக்னாயக ஸ்நானம் 

திறந்த வெளியில் சூரியனுக்கு கீழே கைகளை மேலே உயர்த்தி கிழக்கு திசை பார்த்து நிற்க வேண்டும். கண்களை மூடி சூரிய ஒளி உங்கள் மீது 10 நிமிடமாவது படும்படி நிற்க வேண்டும். இது சூரிய குளியல் எனப்படும், உடலில் இருக்கும் எவ்வளவு வலிமையான பாக்டீரியாவும் அழிக்கப்படும்

மண ஸ்நானம் 

உடலில் ஈர மணலையோ, களிமண்ணையோ தேய்த்து கொள்ள வேண்டும். உடலில் இருக்கும் அனைத்து துளைகளும் வெளியே தெரியும் அளவிற்கு தேய்க்க வேண்டும். 15 நிமிடம் கழித்து துணியால் மண்ணை துடைக்க குளிக்க வேண்டும். 

மஹேந்திர ஸ்நானம் 

மண ஸ்நானம் முடிந்த பிறகு தண்ணீரால் உடலை கழுவுவதற்கு பெயர்தான் மஹேந்திர ஸ்நானம். தினமும் இவ்வாறு குளிப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். 

மந்திர ஸ்நானம் 

ஓடும் தண்ணீரில் கடவுளை வணங்கி குளித்துவிட்டு அகினிதேவர் அல்லது வருணபகவானை நினைத்து மந்திரங்களை கூறி கரையேறுவதாகும். இதுவே விஷ்ணு பகவானை வணங்கி விஷ்ணு மந்திரத்தை கூறி வழிபடுவது மனோ ஸ்நானம் ஆகும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்