பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

பிரசவம் நடந்த 10 நாட்களுக்குள் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடுகிறதுகர்ப்பப்பையின் வாய்ப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகள் 100 சதவிகிதம் பழைய நிலையை முழுமையாக அடைவதற்கு வாய்ப்பு கிடையாது.

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் ஹார்மோன் சுரப்பு சற்று குறைவாகவே இருக்கும். அதனால் ஒருசிலருக்கு மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில மாதங்கள் ஆகும்.விரிவடைந்த வயிறு பகுதி சுருங்குவதால் உண்டாகும் கோடு, சுருக்கம் போன்றவை தானாக மறைவதில்லை. இதற்கு தேவையான பயிற்சி மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களின் சிறுநீரகம், ரத்தக்குழாய் போன்றவையும் பழைய நிலையை அடைவதற்கு சில மாதங்கள் ஆகலாம். அதனால் குறைந்தது இரண்டு மாதங்கள் பெண் ஓய்வு எடுப்பது நல்லது. அதேநேரம் முழு ஓய்வாக படுக்கையில் இல்லாமல் கை, கால்களுக்கு சின்னச்சின்ன பயிற்சிகள் கொடுத்து சுறுசுறுப்புடன் திகழவேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்