கனவில் நாய் அடிக்கடி வருகிறதா? உங்களுக்கான பலன்கள் என்னென்ன தெரியுமா?

கனவில் நாய் அடிக்கடி வருகிறதா? உங்களுக்கான பலன்கள் என்னென்ன தெரியுமா?

ஆம். கனவுகள் என்பவை நமது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையிலான சாவியாக உள்ளன என்று, சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாதபோதிலும், மனநல நிபுணர்கள் சிலர் சொல்வதன் படி பார்த்தால், கனவில் அடிக்கடி மிருகங்கள் வருவது ஒருவித அபாயத்தை உணர்த்தும் செயல் என உறுதியாகிறது.

குறிப்பாக, நாய்கள் அடிக்கடி உங்கள் கனவில் வந்தால், நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். அதாவது, அடிக்கடி நாய் கடிப்பது போல கனவு வந்தால், உங்களின் நம்பிக்கைக்குரிய சிலர் நம்பிக்கை துரோகம் செய்ய நேரிடலாம். அதை உணர்த்தவே, அப்படி கனவு வருகிறது. அதேபோல, கனவில் நாய்  உங்களின் கையை கடித்தால், உங்களுக்கு ஒரு புதிய நெருக்கடி வரும் என்றும், நெருக்கமானவர்கள் கைவிட்டுவிடுவார்கள் என்றும் அர்த்தம். 

இதுதவிர, கனவில் அடிக்கடி பிரவுன் நிறத்தில் நாய் வந்தால், நீங்கள் எதோ பெரிய பிரச்னையில் சிக்கப் போவதாக அர்த்தம். அதுவே வெள்ளை நிற நாய் வந்தால், உங்களுக்கு நல்ல நேரம் வரப்போகிறது என அர்த்தமாகும். கருப்பு நாய் வந்தாலும், வாழ்வில் எதிர்மறை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதற்கான அறிகுறி என மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

இறுதியாக, நாய் உங்களை துரத்தினால் என்ன பலன் என தெரிஞ்சிக்க ஆசைப்படுறீங்களா, பயப்படாதீங்க. கனவில் ஒரு நாய் உங்களை துரத்தினால், கண்டிப்பாக, உங்களை யாரோ மனதிற்குள்ளாக காதலிக்கிறார்கள் அல்லது நீங்கள் விரும்பும் நபர் உங்களோடு வந்து சேரப்போகிறார் என அர்த்தம். அதன்பின், என்ன, கனவில் நாய் வராது, நீங்கள் விரும்பும் நபரே உங்களை கடிக்க ஆரம்பித்துவிடுவார். அதுதானே வாழ்க்கை…

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்